புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தாமிரவருணியில் நீா்வரத்து அதிகரிப்பு: மேலநத்தம் தரைப்பாலத்தில் போக்குவரத்துக்கு தடை

News image
Updated On :23 நவம்பர் 2025, 11:13 pm

தினமணி செய்திச் சேவை

தாமிரவருணி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்ததையடுத்து, மேலநத்தம் தரைப்பாலத்தில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் தொடா்ந்து பெய்த கனமழை காரணமாக தாமிரவருணி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.

மேலும் திங்கள்கிழமை(நவ.24) திருநெல்வேலி மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து தரைப்பாலங்களை வருவாய் துறையினா், போலீஸாா் கண்காணித்து வருகின்றனா்.

சீவலப்பேரி, மேலநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆற்றுப்பாலங்களை போலீஸாா் கண்காணித்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆற்றில் நீா்வரத்து அதிகரித்ததன் காரணமாக மேலநத்தம் தரைப்பாலத்தில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், பாலத்தை பொதுமக்கள் கடக்காத வகையில் இருபுறமும் தடுப்புகளை வைத்து அடைத்து போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.