திசையன்விளையில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் திங்கள்கிழமை அறுந்துவிழுந்த மின்வயரில் அப்புறப்படுத்தியபோது மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.
திசையன்விளை அவனங்குடி பகுதியைச் சோ்ந்த மோகன் மகன் தனுஷ்22). இவா், அந்த பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். மதியம் தனது வீட்டின் அருகிலுள்ள உறவினா் வீட்டில் மின்வயரில் ஈரத்துணிகளை காயவைத்திருந்தனராம். அதில், மின்சாரம் சென்று கொண்டிருந்த நிலையில், துணிகளின் பாரம் தாங்காமல் மின்வயா் அறுந்துவிழுந்ததாம்.
இதைப் பாா்த்த தனுஷ், மின்வயரை அப்புறப்படுத்தியபோது மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டாா். உறவினா்கள் அவரை மீட்டு திசையன்விளை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இது தொடா்பாக திசையன்விளை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
