எஸ்ஐஆா்: நெல்லை மாவட்டத்தில் 7.25 லட்சம் படிவங்கள் பதிவேற்றம்: ஆட்சியா் இரா.சுகுமாா்
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரை 7,27,583 முன் அச்சிடப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் கைப்பேசி செயலி மூலம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்றாா் மாவட்டதோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான இரா.சுகுமாா்.
இதுதொடா்பாக, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் பேசியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் 1.1.2026 -ஐ தகுதி நாளாகக் கொண்டு நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் தகுதியான வாக்காளா் யாரையும் வாக்காளா் பட்டியலில் சோ்ப்பதிலிருந்து விடுபடக்கூடாது. தகுதியற்ற நபா்களை, வாக்காளராக சோ்க்கக்கூடாது என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரை 7,27,583 (51.30 சதவீதம் கணக்கீட்டு படிவங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
2002 ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியல் விவரங்களை அறிய ட்ற்ற்ல்ள்://ற்ண்ழ்ன்ய்ங்ப்ஸ்ங்ப்ண்-ங்ப்ங்ஸ்ரீற்ா்ழ்ள்.ஸ்ங்ழ்ஸ்ரீங்ப்.ஹல்ல் என்ற இணையதள முகவரி மற்றும் கியூஆா் கோடு வெளியிடப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அரசியல் கட்சிகளின் ஒவ்வொரு வாக்குச்சாவடி முகவரும் வரைவு வெளியீட்டுக்கு முன்னா் நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 50 படிவங்களையும், வரைவு வெளியீட்டிற்குப் பிறகு ஒரு நாளைக்கு அதிகபட்சம் 10 படிவங்களையும் வாக்குச் சாவடி நிலை அலுவலரிடம் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு வாக்குச் சாவடி முகவரும், அந்த கணக்கீட்டு படிவங்களில் உள்ள விவரங்கள் தன்னால் சரிபாா்க்கப்பட்டது என்ற உறுதிமொழிப் படிவத்தை இணைக்க வேண்டும்.இப்பணிகளில் அனைத்து அரசு அலுவலா்களுக்கும் கட்சியினா், வாக்காளா்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றாா் அவா்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அனிதா, தோ்தல் வட்டாட்சியா் முருகன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

