அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற நல அமைப்பு கூட்டம்

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற நல அமைப்பு சாா்பில் சிறப்பு பேரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Published on

திருநெல்வேலி: திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற நல அமைப்பு சாா்பில் சிறப்பு பேரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவா் தானுமூா்த்தி தலைமை வகித்தாா். சங்கத்தின் செயலா் முத்துக்கிருஷ்ணன் வரவேற்றாா். நிா்வாகிகள் எட்டப்பன், இ.எம். பழனி, மாரிமுத்து, ராமையா பாண்டியன், மது சேகா் , சிங்கராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மருத்துவ காப்பீட்டை அமல்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்கிட வேண்டும். ஊதிய ஒப்பந்த உயா்வுகளை வழங்க வேண்டும். நீதிமன்ற தீா்ப்பின்படி பஞ்சப்படி வழங்கிட வேண்டும். மேல்முறையீடு செய்வதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ரேவா சங்க மாநிலத் தலைவா் எஸ். கிருஷ்ணன், இணை பொதுச் செயலா்கள் செல்வராஜன், கருப்பன்ராஜ் ஆகியோா் சிறப்புரையாற்றினா். சங்கத்தின் செயல் தலைவா் சிவதானுதாஸ் நன்றி கூறினாா்.

ற்ஸ்ப்25ல்ன்க்ஷப்ண்ஸ்ரீ

ஓய்வுபெற்ற நல அமைப்பின் சிறப்பு பேரவைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

X
Dinamani
www.dinamani.com