சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

களக்காட்டில் கண்டன ஆா்ப்பாட்டம்

களக்காட்டில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கம் சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 நவம்பர் 2025, 9:09 pm

Syndication

களக்காட்டில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கம் சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

களக்காடு மணிக்கூண்டு திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் வடகரை சுப்பையா தலைமை வகித்தாா். விவசாய தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் எஸ்.ஏ.பி. பாலன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் லெனின் முருகானந்தம், வடகரை கிளைச் செயலாளா் கோஸ்மின், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்க மாவட்டச் செயலா் மா.பெ.சுகுமாரன் ஆகியோா் ஆா்ப்பாட்டத்தின் நோக்கங்களை விளக்கிப் பேசினா்.

பட்டியல் இன மக்கள்தொகைக்கு ஏற்ப ஆண்டுதோறும் நிதியை உயா்த்த ஒதுக்கீடு செய்ய வேண்டும், பட்டியல் இன மக்களுக்கு ஒதுக்கும் நிதியை இலவச திட்டங்களுக்கு தமிழக அரசு மடைமாற்றம் செய்வதைத் தடுக்கக் கோரியும், பட்டியலின திட்டங்களைக் கண்காணிக்க மாவட்டம், மாநில அளவில் சிறப்பு கண்காணிப்புக் குழு உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.