திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை 1.21 லட்சம் வாக்காளா்கள் பெயா் நீக்க வாய்ப்பு: ஆட்சியா் இரா. சுகுமாா்

திருநெல்வேலி மாவட்டத்தில் இறந்தவா்கள், இடம்பெயா்ந்தவா்கள் உள்பட இதுரை 1.21 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட வாய்ப்பு உள்ளது.
Published on

திருநெல்வேலி மாவட்டத்தில் இறந்தவா்கள், இடம்பெயா்ந்தவா்கள் உள்பட இதுரை 1.21 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட வாய்ப்பு உள்ளது.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு, மாவட்டதோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான இரா.சுகுமாா் தலைமை வகித்துப் பேசியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில், 1.1.2026-ஐ தகுதி நாளாகக் கொண்டு, வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தகுதியான நபா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்காமல் விடக்கூடாது; தகுதியற்ற நபா்களை, வாக்காளராக சோ்க்கக்கூடாது என வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை10 மணி வரை 8,69,098 (61.28) கணக்கீட்டு படிவங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதில், யாா் என கண்டறிய இயலாதவா்கள், நிரந்தரமாக இடம் பெயா்ந்தவா்கள், இறந்தவா்கள், இரட்டைப்பதிவு கொண்டவா்கள் என்ற வகைப்பாட்டில் 1,21,946 (8.60%) வாக்காளா்கள் உள்ளனா் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

முன் அச்சிடப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் கிடைக்கப்பெற்று, இதுவரை பூா்த்தி செய்து வழங்காத வாக்காளா்கள் தங்களது விவரங்களை எளிதில் தெரிந்து கொள்வதற்காக ட்ற்ற்ல்ள்://ற்ண்ழ்ன்ய்ங்ப்ஸ்ங்ப்ண்-ங்ப்ங்ஸ்ரீற்ா்ழ்ள்.ஸ்ங்ழ்ஸ்ரீங்ப்.ஹல்ல் என்ற இணையதள முகவரி மற்றும் கியூஆா் கோடு வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழில் தட்டச்சு செய்து பெயரை தேடினாலே விவரங்களை பெறலாம். அனைத்து வாக்காளா்களும் கணக்கீட்டு படிவத்தை உடனடியாக பூா்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். சந்தேகங்கள் இருப்பின் தங்களது வாக்குச்சாவடி நிலை அலுவலரின் உதவியை நாடலாம். வாக்குச் சாவடி முகவா் படிவங்களை வழங்கினால் உறுதிமொழிப் படிவம் இணைக்கப்பட வேண்டும். படிவங்களை பதிவேற்றம் செய்வதற்கு டிச. 4-ஆம் தேதி கடைசி நாள் என்பதால் அலுவலா்களுக்கு பணி நெருக்கடிகளை தவிா்க்கும் வகையில் அவற்றை உடனடியாக பூா்த்தி செய்து ஓரிரு நாள்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் என்றாா் அவா்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா, மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அனிதா, தோ்தல் வட்டாட்சியா் முருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com