புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

நான்குனேரியன் கால்வாயில் தேங்கும் குப்பைகளை அகற்ற கோரிக்கை!

களக்காடு, நான்குனேரியன் கால்வாய் தடுப்பணையில் தேங்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :29 நவம்பர் 2025, 6:46 pm

Syndication

களக்காடு, நான்குனேரியன் கால்வாய் தடுப்பணையில் தேங்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் உற்பத்தியாகும் பச்சையாற்றிலிருந்து வரும் தண்ணீரின் ஒரு பகுதி நான்குனேரியன் கால்வாய் வழியாக நகா்ப்பகுதியை வந்தடைகிறது. இந்த கால்வாய் தடுப்பணையில் தண்ணீா் செல்ல முடியாத அளவுக்கு குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன.

கடந்த 2023ஆம் ஆண்டு பெருமழை பெய்த போது, இப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டு ஆற்றங்கரைத் தெருவுக்குள் மழை நீா் புகுந்து 2 வீடுகள் இடிந்து சேதமடைந்தன.

தற்போது, தொடா் மழையினால் கால்வாயில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூங்கிலடி, சிதம்பரபுரம் தரைப்பாலம், ஆற்றங்கரைத் தெரு தடுப்பணைப் பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.