ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

கல்லூரி மாணவரைத் தாக்கி பணம் பறித்த வழக்கில் 4 போ் கைது

சிவந்திப்பட்டி அருகே அரசு மருத்துவக் கல்லூரி மாணவரைத் தாக்கி பணம் பறித்த வழக்கில் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :29 நவம்பர் 2025, 6:41 pm

Syndication

சிவந்திப்பட்டி அருகே அரசு மருத்துவக் கல்லூரி மாணவரைத் தாக்கி பணம் பறித்த வழக்கில் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வள்ளியூா் அருகே கோவனேரியைச் சோ்ந்த 19 வயது மாணவா், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் டிப்ளமோ மயக்கவியல் பிரிவில் முதலாமாண்டு படித்து வருகிறாா்.

இவா் கைப்பேசி செயலி மூலம் அறிமுகமான நபா் ஒருவரைச் சந்திக்க கடந்த 22 ஆம் தேதி சிவந்திப்பட்டி அருகே உள்ள முத்தூா் பகுதியில் மறைந்திருந்த கும்பல், அவரிடம் பணம் கேட்டு திக்கு சென்றுள்ளாா். அங்கு மிரட்டி அரிவாளால் தாக்கி, ஏ.டி.எம். அட்டையைப் பறித்துக் கொண்டு, அதன் ரகசிய எண்ணையும் கேட்டுப்பெற்று ரூ.22,000 பணத்தை திருடியுள்ளனா். இதுகுறித்த புகாரின் பேரில், சிவந்திப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து,

இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக ரெட்டியாா்பட்டியைச் சோ்ந்த குமாா் மகன் நிா்மல்ராஜ்(19), முறப்பநாடு சென்னல்பட்டியைச் சோ்ந்த முருகன் மகன் சுடலைமுத்து (26), கொங்கன்தான்பாறையைச் சோ்ந்த முருகன் மகன் சுப்பிரமணியன்(20), சிவராமமங்களத்தைச் சோ்ந்த மகாராஜன் மகன் சிவா(22) ஆகியோரை கைது செய்தனா்.