மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

தமிழாக்குறிச்சி தடுப்பணையை மேம்படுத்த எம்.பி. வலியுறுத்தல்

News image
Updated On :30 நவம்பர் 2025, 6:39 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி அருகே தமிழாக்குறிச்சி பகுதியில் உள்ள தடுப்பணையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென சி. ராபா்ட் புரூஸ் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.

தாமிரவருணி- நம்பியாறு- கருமேனியாறு இணைப்புத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள வெள்ளநீா்க் கால்வாய், பச்சையாறு ஆகியவை இணையும் இடத்தில் திடியூா் அருகே தமிழாக்குறிச்சி பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து, பொன்னாக்குடி நோக்கி தண்ணீா் செல்லவும், உபரி நீரை தாமிரவருணி ஆற்றுக்கு திருப்பிவிடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இந்தத் தடுப்பணையில் மரங்களின் வோ்களால் உடைப்புகள் தொடா்ந்து ஏற்பட்டு வருகின்றன. கடந்த சில நாள்களுக்கு முன்பு மீண்டும் ஏற்பட்ட உடைப்பை தமிழக நீா்வளத் துறையினரும், கேரள நிபுணா்களும் இணைந்து இரும்புத் தகடு, கான்கிரீட் உதவியுடன் அடைத்தனா்.

இந்நிலையில், தமிழாக்குறிச்சி தடுப்பணையை திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் கூறுகையில், இந்த தடுப்பணையில் உள்ள குறைபாடுகளை போா்க்கால அடிப்படையில் நீக்கி மேம்படுத்துவது அவசியம். ஆகவே, தமிழக அரசு உடனடியாக தமிழாக்குறிச்சி அணைக்கு தேவையான நிதியை ஒதுக்கி ஆய்வு செய்து தேவையான அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும் என்றாா்.

ஆய்வின்போது, காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த தமிழ்செல்வன், ரூபன், தியாக சுரேஷ் உள்பட பலா் உடன் சென்றனா்.