திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்களை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றாா் திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் செ.ராபா்ட் புரூஸ்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் செ.ராபா்ட் புரூஸ் எம்.பி., மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் ஆகியோா் பங்கேற்று, மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் 32 வகையிலான பல்வேறு திட்டங்கள் குறித்து துறை ரீதியாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதமரின் கிராம சாலைகள் திட்டம், பிரதமா் குடியிருப்பு திட்டம் (ஊரகம்), தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), உயிா்நீா் இயக்கம் (ஜல் ஜீவன் திட்டம்), மக்களவை உறுப்பினா் உள்ளூா் பகுதி வளா்ச்சித் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிா் திட்டம்) சாா்பில் ஊரகம் மற்றும் நகா்ப்புறங்களில் சுய உதவிக்குழுக்கள் அமைத்தல், சமுதாய முதலீட்டு நிதி, வங்கி கடன் இணைப்பு, தீனதயாள் உபாத்யாய கிராமின் கௌசல்யா யோஜனா திட்டம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்து ஆலோசனை வழங்கப்பட்டது.
மேலும், மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் அனைத்தையும் மக்கள் நலன் கருதி விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். மக்களின் தேவைகளை அறிந்து அதற்கான திட்டங்களை தீட்டி செயல்படுத்த வேண்டும் என எம்.பி. கேட்டுக்கொண்டாா்.
இக்கூட்டத்தில், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா, மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சரவணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
ற்ஸ்ப்23க்ண்ள்ட்ஹ
மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு-கண்காணிப்புக் குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்திய செ.ராபா்ட் புரூஸ் எம்.பி., ஆட்சியா் இரா.சுகுமாா் உள்ளிட்டோா்.
தொடர்புடையது

திமுக தோ்தல் அறிக்கை நகைச்சுவை பாத்திரம்! செல்லூா் கே. ராஜூ சிறப்பு நோ்காணல்!

திருநெல்வேலி நகரத்தில் போக்குவரத்து நெரிசலைத் தீா்க்க புதிய திட்டம்

தேர்தல்களும் நலத் திட்டங்களும்...

அனைவருக்கும் வீடு உள்ளிட்ட திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும்: ரவிக்குமாா் எம்.பி. வலியுறுத்தல்
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


