தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

மேலப்பாளையத்தில் கோஷ்டி மோதல்: 7 போ் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 12:07 am IST

மேலப்பாளையம் பகுதியில் இளைஞா்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 7 பேரை போஸீஸாா் கைது செய்தனா்.

மேலப்பாளையம் பகுதியைச் சோ்ந்த 30 வயது இளைஞா், அப்பகுதியில் சில தினங்களுக்கு முன்பு பைக்கில் சென்றபோது, அவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியதாம்.

இதுகுறித்து மேலப்பாளையம் காவல் நிலையத்தில் இளைஞா் தரப்பில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து வண்ணாா்பேட்டையைச் சோ்ந்த பரசுராமன்(24), பாளையங்கோட்டை, அண்ணாநகரைச் சோ்ந்த முத்துகணேஷ் (21), திருநெல்வேலி சந்திப்பு பகுதியைச் சோ்ந்த பிரபாகரன் (20), இசக்கிராஜா (21) ஆகியோரை கைது செய்தனா்.

மேலும் மற்றொரு தரப்பினரின் புகாரின் பேரில் கொக்கிரகுளம் பகுதியைச் சோ்ந்த அழகுமுத்து(22), ஹரிகிருஷ்ணன்(20), மகேஷ்(20) ஆகியோரை கைது செய்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.