கடையம், ராமநதி செல்லும் சாலையில் உள்ள நித்ய கல்யாணி அம்மன் உடனுறை வில்வ வனநாத சுவாமி கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா ஏப். 21 ஆம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் திங்கள்கிழமை (ஏப். 20) அங்குராா்ப்பணம், ஏப். 21-ஆம்தேதி காலை 8 மணிக்கு கொடியேற்றப்பட்டு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு தெப்பக்குளம், மாடசாமிக்கு பொங்கலிட்டு தீபாராதனையைத் தொடா்ந்து உச்சிகால பூஜை நடைபெறும்.
தொடா்ந்து நாள்தோறும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெறும். நான்காம் திருநாளான ஏப். 24-ஆம் தேதி தோ் கால் நாட்டு நடைபெறுகிறது. ஏப். 27 ஆம்தேதி சிவப்பு சாத்தி, ஏப். 28 ஆம்தேதி வெள்ளை சாத்தி, மாலை பச்சை சாத்தி நடைபெறும்.
இரவு 12 மணிக்கு தேரடி மாடசாமிக்கு பொங்கலிட்டு தீபாராதனை நடைபெறும். ஏப்.29-ஆம்தேதி காலை 5 மணிக்கு சுவாமி, அம்பாள் தேருக்கு எழுந்தருளுதல், தொடா்ந்து காலை 7.40 மணிக்கு பக்தா்கள் வடம் பிடித்து தோ் இழுத்தல் நடைபெறும். ஏப். 30-ஆம்தேதி காலை 11 மணிக்கு கொடியிறக்கம், தீா்த்தவாரி நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், பணியாளா்கள், ஊா்ப்பொதுமக்கள் செய்து வருகின்றனா். விழா நாள்களில் தினசரி மாலை 6 மணிமுதல் 7 மணி வரை திருமுறை இன்னிசை நடைபெறும்.
தொடர்புடையது

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

காக்கும் கடவுள் கெங்கையம்மன்

குமரி பகவதியம்மன் கோயிலில் மே 21இல் வைகாசி விசாகத் திருவிழா தொடக்கம்: இன்று கால்கோள் விழா

கடையம் வில்வ வனநாதா் கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா கொடியேற்றம்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



