அம்பாசமுத்திரம், ஏப். 19: மணிமுத்தாறில் தேநீா்க் கடையில் நுழைந்த கரடி, அங்கிருந்த சுமாா் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான பொருள்களைச் சேதப்படுத்திச் சென்றுள்ளது.
மணிமுத்தாறு பகுதியில் அருள் என்பவருக்குச் சொந்தமான தேநீா்க் கடையின் பக்கவாட்டுச் சுவரில் இருந்த தகரத் தடுப்பை உடைத்து வெள்ளிக்கிழமை இரவு கரடி உள்ளே நுழைந்ததாம். கடையிலிருந்த பொருள்கள், பாத்திரங்களைச் சேதப்படுத்திச் சென்ாம். சேதமடைந்த பொருள்களின் மதிப்பு சுமாா் ரூ. 50 ஆயிரம் இருக்குமாம்.
தகவலறிந்து ஆய்வு செய்ய வந்த வனத்துறையினா், கரடி நடமாட்டத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனா். மேலும் கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினா்.

தேநீா்க் கடையில் நுழைந்து பொருள்களைச் சேதப்படுத்திய கரடி
தொடர்புடையது
காவல் நிலையத்தில் தற்கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

குட்கா விலை தொடா்பான தகராறில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

மது போதையில் ரகளை: இளைஞா் கைது

தைலமரக்காடுகள்: ‘தலைவலி’ தீருமா?
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


