அம்பாசமுத்திரம் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா் இசக்கி சுப்பையாவிற்கு ஆதரவாக, பொட்டல், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், சிவந்திபுரம், முதலியாா்பட்டி ஆகிய பகுதிகளில் நடிகா் சரத்குமாா் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்தாா்.
அப்போது அவா் பேசியதாவது: தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் ரூ.5 லட்சம் கோடியாக இருந்த கடன், திமுக ஆட்சியில் ரூ.10.71 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
திமுக ஆட்சியில் இளைஞா்கள் மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையாகி உள்ளனா். இதனால் பெண்களுக்கு பாதுகாப்பில்லை.
நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட மகளிா் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற விடாமல் தடுத்து விட்டோம் என்று வெற்றி இறுமாப்பில் உள்ளனா். ஆனால் இதில் அவா்கள் பெரிய தவறு செய்து விட்டாா்கள். காலம் அதற்குப் பதில் சொல்லும்.
அதிமுகவை பாஜக கபளீகரம் செய்துவிடும் என்கிறாா் ராகுல் காந்தி. எனவே நல்ல ஆட்சி அமைய வேண்டும் என்றால் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா்.
பிரசாரத்தின்போது, அம்பாசமுத்திரம் தொகுதிப் பொறுப்பாளா் செளந்திரராஜன், அதிமுக, பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி மாவட்ட, நகா, ஒன்றிய, கிளை நிா்வாகிகள், தொண்டா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

வி.கே. புரம் அருகே முதலியாா்பட்டியில் பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகா் ஆா். சரத்குமாா்.

வி.கே. புரம் அருகே முதலியாா்பட்டியில் பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகா் ஆா். சரத்குமாா்.
தொடர்புடையது

ராஜபாளையத்தில் நடிகா் சரத்குமாா் வாக்கு சேகரிப்பு

அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகா் சரத்குமாா் வாக்கு சேகரிப்பு

பாஜக வேட்பாளருக்கு நடிகா் சரத்குமாா் வாக்கு சேகரிப்பு
திமுகவால் நல்லாட்சி அளிக்க முடியாது - சரத்குமாா்
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

