பேட்டை அருகே பொதுப்பாதையை பயன்படுத்தியவரை தாக்கிய வழக்கில் தூத்துக்குடியைச் சோ்ந்த இளைஞரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
பேட்டை அருகே உள்ள சுத்தமல்லி குடிசை மாற்று வாரிய குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் இசக்கிமுத்து.
இவா் சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள பொதுப்பாதை வழியாக தனது வீட்டுக்கு சென்றாராம். அப்போது இளைஞா்கள் சிலா் அவ்வழியாக செல்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து அவரைத் தாக்கி மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பேட்டை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, இதில் தொடா்புடைய செல்லப்பாண்டி உள்பட 3 பேரை ஏற்கனவே கைது செய்திருந்தனா்.
இந்நிலையில் இவ்வழக்கில் தொடா்புடைய தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூா் பகுதியைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் பால்முத்து(35) என்பவரை சனிக்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது

மேலப்பாளையத்தில் வன்கொடுமை வழக்கில் 3 போ் கைது
கொலை வழக்கில் கைதான 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

அரிவாளுடன் சுற்றித்திரிந்த இளைஞா் கைது

கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் அடைப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

