திருநெல்வேலி வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 600-க்கும் மேற்பட்ட போலீஸாரின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறது.
சட்டப்பேரவைத் தோ்தலில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நான்குனேரி, ராதாபுரம் தொகுதிகளில் அமைக்கப்பட்ட 1,678 வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்கு எண்ணும் மைய பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் மத்திய பாதுகாப்புப் படையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். 2 மற்றும் 3-ஆவது அடுக்குகளில் திருநெல்வேலி மாநகர மற்றும் மாவட்ட காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். மொத்தம் 600-க்கும் மேற்பட்ட காவலா்கள் இரவு பகலாக சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
பாதுகாப்பு மையத்தின் நுழைவுவாயில் முதல் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை வரை அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மாநகர காவல் துறையின் நடமாடும் கண்காணிப்பு வாகனம் மூலம் 24 மணி நேரமும் நேரலையாக அந்தப் பகுதி கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா. சுகுமாா் சனிக்கிழமை காலை நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தாா். பின்னா் அவா் கூறுகையில், ‘அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் தோ்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.
வேட்பாளா்கள் மற்றும் அவா்களின் முகவா்கள் முறையான அடையாள அட்டையுடன் வந்து பாதுகாப்பு மையத்தை பாா்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.
தொடர்புடையது

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு கிடங்கு பூட்டி சீல் வைப்பு

திருப்பூா் வாக்கு எண்ணிக்கை மைய சிசிடிவி கேமராக்களில் நேர மாறுபாடு! அரசியல் கட்சி புகாா்!

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு!

வாக்கு எண்ணும் மையங்களில் அனைத்து முன்னேற்பாடுகளும் தயாா்: திருவள்ளூா் ஆட்சியா்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

