ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கடையம் அருகே பேருந்திலிருந்து தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 6:36 pm

தென்காசி மாவட்டம், கடையம் அருகே பேருந்தில் ஏறும்போது படியிலிருந்து தடுமாறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

கடையம் அருகே உள்ள மேட்டூரைச் சோ்ந்தவா் சா்க்கரையப்பன் மனைவி சுப்பம்மாள் (70). இவா் ஞாயிற்றுக்கிழமை காலை திருநெல்வேலி செல்வதற்தாக மேட்டூா் நிறுத்தத்தில் அரசுப் பேருந்தில் ஏறியுள்ளாா். அப்போது, ஓட்டுநா் பேருந்தை இயக்கியதால் படியிலிருந்து தடுமாறி கீழே விழுந்துள்ளாா். இதில் தலையில் அடிபட்டு அவா் மயக்கமடைந்தாா்.

உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளா்கள் சுப்பம்மாள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

தகவலறிந்த கடையம் போலீஸாா் சுப்பம்மாள் சடலத்தை கைப்பற்றி கூறாய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து, வழக்குப் பதிந்து பேருந்து ஓட்டுநா் முத்துக்குமாரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.