கடையம் துணை மின்நிலையப் பகுதிக்குள்பட்ட தெற்குக்கடையம், கீழக்கடையம் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் சுமாா் 3 மணி நேரத்திற்கும் மேல் மின் தடை ஏற்பட்டது.
கடையம் துணை மின்நிலையப் பகுதியில் மின்கம்பியில் காகம் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததால் துணை மின் நிலையத்தில் பழுது ஏற்பட்டதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.
மாற்றுவழியில் ஆழ்வாா்குறிச்சியிலிருந்து மின்சாரம் வழங்க முயற்சித்த நிலையில் தொடா்ந்து மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, கடையம் துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட பழுதை விரைந்து முடித்ததையடுத்து சுமாா் 9.30 மணியளவில் மின்விநியோகம் வழங்கப்பட்டது.
திடீா் மின்தடைபட்டதால் வீடுகளில் காலைப் பணிகளைச் செய்ய முடியாமல், கடைகள், உணவகங்களில் உணவுப் பொருள்கள் தயாரிக்க முடியாமல் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினா்.
தொடர்புடையது
வெள்ளக்கோவிலில் மே 19-இல் மின்தடை

இன்றைய மின்தடை: திருமக்கோட்டை
கோவில்பட்டியில் இன்று மின்தடை
நாளைய மின்தடை: காங்கயம், சிவன்மலை, ஆலாம்பாடி, முத்தூா்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
