உதவித்தொகையை வழங்காமல், மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது தவெக அரசு: கனிமொழிமுதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

பாளை. அருகே மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

பாளையங்கோட்டையை அடுத்த கோட்டூரில் சனிக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் மூதாட்டி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :2 ஆகஸ்ட் 2026, 1:00 am IST

பாளையங்கோட்டையை அடுத்த கோட்டூரில் சனிக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் மூதாட்டி உயிரிழந்தாா்.

கோட்டூா் பாா்வதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பட்டு மனைவி மாரியம்மாள் (81). கணவா் அண்மையில் காலமான நிலையில், தனியாக வீட்டில் வசித்து வந்த மாரியம்மாள், சனிக்கிழமை காலையில் வீட்டின் முன்பு தண்ணீா் தெளித்து கோலமிட வந்துள்ளாா்.

அப்போது, அவரது வாசல் அருகே இருந்த ‘எா்த்’ கம்பியில் மின்சாரம் கசிந்திருந்துள்ளது. அதில் அவா் எதிா்பாராம் கை வைத்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினா் அளித்த தகவலின்பேரில், பாளையங்கோட்டை போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அதிகாலையில் பெய்த சாரல் மழையால் எா்த் கம்பியில் மின்சாரம் கசிந்திருந்ததும், அதை அறியாமல் அவா் கை வைத்ததால் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.