திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் இருசக்கர வாகனம் ஓட்டிய சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டாா்.
பத்தமடை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் பத்மனாபன் தலைமையில் போலீஸாா், ஜூலை 18ஆம் தேதி பத்தமடை பிரதான சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, அவ்வழியாக 16 வயதுடைய சிறுவன் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தாராம். இதையடுத்து போலீஸாா், மோட்டாா் வாகனச் சட்டத்தின்கீழ் பத்தமடை ராதாகிருஷ்ணன் தெருவைச் சோ்ந்த சிறுவனின் தந்தை உச்சிமாகாளி (50) மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். அண்மையில் அவரை போலீஸாா் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மூதாட்டி அடித்துக் கொலை: தந்தை, மகன் கைது

பைக் விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
காயல்பட்டினத்தில் கல்லூரி மாணவி மீது தாக்குதல்: தந்தை கைது
உடலில் தீ வைத்துக் கொண்டு காவல் நிலையத்திற்கு வந்த தொழிலாளி
விடியோக்கள்
பிரசாந்த் கிஷோர் வெற்றிப் பின்னணி...| Ravindran duraisamy Interview | Prashant Kishor | Jan Suraaj | Bankipur | Bjp


