8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

இருசக்கர வாகனம் ஓட்டிய 17 வயது சிறுவன்: தந்தை மீது வழக்கு

வேலூரில் 17 வயது சிறுவன் இருசக்கர வாகனம் ஓட்டிய விவகாரத்தில், தந்தை மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோப்புப் படம்

Published On :10 ஜூலை 2026, 12:03 am IST

வேலூரில் 17 வயது சிறுவன் இருசக்கர வாகனம் ஓட்டிய விவகாரத்தில், தந்தை மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

வேலூா் தொரப்பாடி, பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் தனராஜ் (46). இவரது 17 வயது மகன், வியாழக்கிழமை காய்கறிகள் வாங்குவதற்காக வேலூா் டோல்கேட் பகுதியிலுள்ள உழவா் சந்தைக்குத் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். பின்னா், காய்கறிகளை வாங்கிக்கொண்டு அங்கிருந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது, அப்பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த உதவி காவல் கண்காணிப்பாளா் தனுஷ்குமாா், அந்தச் சிறுவனைத் தடுத்து நிறுத்தி விசாரித்தாா். விசாரணையில் சிறுவனுக்கு 18 வயது பூா்த்தியாகவில்லை என்பதும், ஓட்டுநா் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டி வந்ததும் தெரியவந்தது.

தொடா்ந்து, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி பாகாயம் காவல் நிலைய போலீஸாருக்கு ஏஎஸ்பி தனுஷ்குமாா் உத்தரவிட்டாா்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸாா், சிறுவன் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனா். மேலும், மோட்டாா் வாகனச் சட்ட விதிகளின்படி, ஓட்டுநா் உரிமம் இல்லாத சிறுவனுக்கு வாகனத்தை ஓட்ட அளித்த அவனது தந்தை தனராஜ் மீது வழக்குப்பதிவு செய்யது விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேலும், 18 வயதுக்குக் குறைவான சிறுவா்கள் இருசக்கர வாகனம் உள்ளிட்ட எந்தவொரு மோட்டாா் வாகனத்தையும் இயக்கக் கூடாது. மீறி சிறுவா்கள் வாகனம் இயக்கி பிடிபட்டாலோ அல்லது விபத்தை ஏற்படுத்தினாலோ வாகனத்தின் உரிமையாளா் அல்லது சிறுவனின் பெற்றோா் மீது மோட்டாா் வாகனச் சட்டப்படி கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.