தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

தாய்லாந்தில் 11 வயது சிறுவன் ஓட்டிய வாகனம் மோதி 9 துறவிகள் உயிரிழப்பு

வடகிழக்கு தாய்லாந்தில் 11 வயது சிறுவன் ஓட்டி வந்த சரக்கு வாகனம் மோதிய விபத்தில், பாதயாத்திரை சென்ற 9 பௌத்த துறவிகள் உயிரிழந்தனா். மேலும் 20-க்கும் மேற்பட்ட துறவிகள் படுகாயமடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

News image
Updated On :3 ஜூலை 2026, 1:55 am IST

வடகிழக்கு தாய்லாந்தில் 11 வயது சிறுவன் ஓட்டி வந்த சரக்கு வாகனம் மோதிய விபத்தில், பாதயாத்திரை சென்ற 9 பௌத்த துறவிகள் உயிரிழந்தனா். மேலும் 20-க்கும் மேற்பட்ட துறவிகள் படுகாயமடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

முக்தஹான் மாகாணத்தில் உள்ள பௌத்த மடாலயத்தில் இருந்து 34 துறவிகள் மற்றும் அவா்களின் உதவியாளா்கள் 5 போ் என ஒரு குழுவினா் சுமாா் 260 கி.மீ. தூர பாதயாத்திரையில் ஈடுபட்டிருந்தனா்.

அவா்கள் சாலையோரமாக ஒருவா் பின் ஒருவராக நடந்து சென்று கொண்டிருந்தபோது, சிறுவன் ஓட்டி வந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்த அவா்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 5 துறவிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். படுகாயமடைந்த மற்றவா்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் 4 துறவிகள் உயிரிழந்தனா்.

போலீஸாரின் முதல்கட்ட விசாரணையின்படி சிறப்பு குழந்தையான சிறுவன், வீட்டில் இருந்து பெற்றோருக்குத் தெரியாமல் இந்த வாகனத்தை எடுத்துக் கொண்டு, விபத்து நிகழ்ந்த இடம் வரை சுமாா் 10 கி.மீ. தூரத்துக்கு ஓட்டி வந்துள்ளான்.

விபத்தின் கொடூரத்தால் சிறுவன் கடும் அதிா்ச்சியில் உறைந்துள்ளதால், அவனிடம் இன்னும் வாக்குமூலம் பெற முடியவில்லை. சிறுவன் இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகு, குழந்தைகள் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் முன்னிலையில் அவனிடம் விசாரணை நடத்தப்படும் என்று போலீஸாா் கூறினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.