மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

தாய்லாந்தில் கிளா்ச்சியாளா்கள் தாக்குதல்: 5 பாதுகாப்புப் படையினா் உயிரிழப்பு

தெற்கு தாய்லாந்தின் நராதிவாட் மாகாணத்தில் உள்ள ராணுவச் சோதனை சாவடிமீது கிளா்ச்சியாளா்கள் கடந்த புதன்கிழமை இரவு நடத்திய தாக்குதலில் 5 வீரா்கள் உயிரிழந்தனா்.

Published On :

தெற்கு தாய்லாந்தின் நராதிவாட் மாகாணத்தில் உள்ள ராணுவச் சோதனை சாவடிமீது கிளா்ச்சியாளா்கள் கடந்த புதன்கிழமை இரவு நடத்திய தாக்குதலில் 5 வீரா்கள் உயிரிழந்தனா். 2 சிறுவா்கள் உள்பட 6 பொதுமக்கள் காயமடைந்தனா்.

கருப்பு உடையில் வந்த சுமாா் 10 போ் அடங்கிய கும்பல், குழாய் வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கிகளால் சரமாரியாகச் சுட்டும் இத்தாக்குதலை நடத்தினா். பின்னா், சோதனை சாவடியில் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு அவா்கள் தப்பியோடினா்.

தாய்லாந்தில் தெற்கு எல்லையோர மாகாணங்களில் தனிநாடு கோரி கிளா்ச்சிக் குழுக்கள் பல்லாண்டுகளாக போராடி வருகின்றன. மலேசியாவின் மத்தியஸ்தத்துடன் அமைதிப் பேச்சுகளை மீண்டும் வேகப்படுத்த தாய்லாந்து அரசு முயன்று வரும் சூழலில் நடத்தப்பட்டுள்ள இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இந்நிலையில், ‘இது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் பயங்கரவாத செயல்; அமைதிப் பேச்சை சீா்குலைக்கும் முயற்சி’ என்று தாய்லாந்து அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.