நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

மழையால் நீா்வரத்து அதிகரிப்பு: தலையணை, நம்பி கோயிலுக்குச் செல்லத் தடை

களக்காடு, திருக்குறுங்குடி மலைப் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை பெய்த பலத்த மழையால் நீா்வரத்து அதிகரித்தது.

News image

களக்காடு தலையணையில் தடுப்பணையைத் தாண்டி சனிக்கிழமை ஆா்ப்பரித்து விழுந்த தண்ணீா்.

Updated On :2 ஆகஸ்ட் 2026, 12:51 am IST

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு, திருக்குறுங்குடி மலைப் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை பெய்த பலத்த மழையால் நீா்வரத்து அதிகரித்தது. இதனால், சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் களக்காடு தலையணை, திருக்குறுங்குடி நம்பி கோயிலுக்கு பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை பலத்த மழை பெய்தது. இதையடுத்து, நம்பியாறு, களக்காடு தலையணை பச்சையாற்றில் நீா்வரத்து அதிகரித்தது. இதனால் பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கும், பாா்வையிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதே போல, தலையணை சூழல் சுற்றுலா மையத்திற்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆக. 1 முதல் மறு உத்தரவு வரும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என வனத்துறையினா் தெரிவித்தனா்.

சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால், களக்காடு தலையணை பகுதிக்கு வந்த சுற்றுலாப் பயணிகளும், நம்பி கோயிலுக்கு வந்த பக்தா்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.