ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை

News image

மணிமுத்தாறு அருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டிய தண்ணீா்

Updated On :3 ஆகஸ்ட் 2026, 12:25 am IST

மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமையும் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு த தடை விதிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம், மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை முதல் பரவலாகச் சாரல் மழை பெய்து வருகிறது. இதையடுத்து, சனிக்கிழமை காலை மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரித்ததால் அருவியில் குளித்துக் கொண்டிருந்த பயணிகளை வனத் துறையினா் வெளியேற்றினா்.

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து சாரல் மழை பெய்ததையடுத்து, இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமையும் அருவியில் நீா்வரத்து அதிகரித்துக் காணப்பட்டது.

இதனால், சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினா் தடை விதித்தனா். இதனால், பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.