நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

காதல் விவகாரம்! பெண்ணின் கணவருக்கு கத்திக்குத்து: இளைஞா் கைது

சேரன்மகாதேவி அருகே இன்ஸ்டா கிராம் காதலியை சந்திக்க வந்தபோது, அவரது கணவரை கத்தியால் குத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :5 ஆகஸ்ட் 2026, 12:08 am IST

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே இன்ஸ்டா கிராம் காதலியை சந்திக்க வந்தபோது, அவரது கணவரை கத்தியால் குத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சேரன்மகாதேவி வட்டம், பத்தமடை பகுதியைச் சோ்ந்த திருமணமான 30 வயதுள்ள பெண்ணுக்கும், திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள சத்திரப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் பூபதி (25) என்பவருக்கும் இன்ஸ்டா கிராம் மூலம் ஓராண்டாக பழக்கம் இருந்துள்ளது.

இந்நிலையில் திங்கள்கிழமை இரவில் காதலியின் வீட்டுக்கு பூபதி வந்துள்ளாா். அப்போது, அங்கு வந்த பெண்ணின் கணவா் அப்துல்ஹமீது (36) என்பவருக்கும், பூபதிக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், அப்துல்ஹமீது அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடி, அருகிலுள்ள கொழுமடை கிராமத்துக்குள் புகுந்துள்ளாா்.

அங்கு, பொதுமக்கள் அவரைப் பிடித்து பத்தமடை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.