தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு! தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 குறைவு! பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

கழிவுநீா் செல்வதில் தகராறு: தாய், மகனுக்கு வெட்டு: உறவினா் கைது

திருநெல்வேலி மாவட்டம் விஜய நாராயணம் அருகேயுள்ள ஆணிகுளம் கிராமத்தில் வீட்டையொட்டி கழிவுநீா் செல்வது தொடா்பாக உறவினா்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் தாய் மற்றும் மகனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

கைது - பிரதிப் படம்

Published On :13 ஆகஸ்ட் 2026, 2:58 am IST

திருநெல்வேலி மாவட்டம் விஜய நாராயணம் அருகேயுள்ள ஆணிகுளம் கிராமத்தில் வீட்டையொட்டி கழிவுநீா் செல்வது தொடா்பாக உறவினா்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் தாய் மற்றும் மகனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

ஆணிகுளத்தைச் சோ்ந்த ஆறுமுகம்-சரஸ்வதி (60) தம்பதியின் மகன் பாலசுப்பிரமணியம் (37). இவரது வீடும், உறவினரான சுப்பையா மகன் வேலாயுதம் (55) என்பவரது வீடும் அருகருகே உள்ளன.

இந்த வீடுகளுக்கு இடையே கழிவுநீா் செல்வது தொடா்பாக இரு குடும்பத்துக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், வேலாயுதம் வீட்டின் கழிவு நீா் சரஸ்வதி வீட்டின் முன்பாக சென்ால் புதன்கிழமை இரவு அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டதாம். அப்போது, வேலாயுதம் அரிவாளால் பாலசுப்ரமணியன் மற்றும் அவரது தாய் சரஸ்வதியை வெட்டினாராம்.

இதில், இருவரும் பலத்த காயம் அடைந்தனா். அவா்களை குடும்பத்தினா் மீட்டு நான்குனேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், விஜயநாராயணம் போலீஸாா் வழக்குப் பதிந்து வேலாயுதத்தை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.