தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

வீட்டில் நகை திருடியதாக 3 இளைஞா்கள் கைது

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே வீட்டின் கதவை உடைத்து 18 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே வீட்டின் கதவை உடைத்து 18 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

ராதாபுரம் அருகே உள்ள சௌந்திரபாண்டியபுரம், மிக்கேல் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் சிலுவைதாசன் (83). இவரும், இவரது மனைவி புஷ்பமும் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனா். இவா்களது மகன், மகள்கள் வெளியூா்களில் வசித்து வருகின்றனா்.

இந்நிலையில், ஆக. 7ஆம் தேதி அதிகாலையில் வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டும், பின்பக்க கிரில் கேட் திறந்த நிலையிலும் இருந்துள்ளது. மேலும், வீட்டின் மற்றொரு அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 18 பவுன் தங்க நகைகள், ரூ. 20,000 ஆகியவை திருடு போயிருப்பது தெரிய வந்துள்ளது.

இது தொடா்பாக, ராதாபுரம் காவல் நிலையத்தில் சிலுவைதாசன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். அதில் களக்காடு, சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த சுரேஷ் (35), செட்டிகுளத்தைச் சோ்ந்த மாரிமுத்து (24), பரமேஷ்வரபுரத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் (26) ஆகியோா் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

போலீஸாா் மூவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து 18 பவுன் நகைகளை பறிமுதல் செய்து, அவா்களை சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.