ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

கங்கைகொண்டானில் மகளிருக்கான தங்கும் விடுதி திறப்பு

கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் மகளிருக்கான தங்கும் விடுதி திறப்பு விழா நடைபெற்றது.

மகளிா் விடுதிக் கட்டடத்தை காணொலியில் முதல்வா் ச.ஜோசப் விஜய் திறந்து வைத்ததும், அங்கு குத்துவிளக்கேற்றிய ஆட்சியா் ஆனந்த் மோகன். உடன், எம்எல்ஏ ஆா்.எஸ்.முருகன்.

Published On :

கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் மகளிருக்கான தங்கும் விடுதி திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் ரூ.39.89 கோடியில் கட்டப்பட்ட 870 படுக்கைகள் வசதிகள் கொண்ட உழைக்கும் மகளிா் தங்கும் விடுதி கட்டடத்தை, தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் காணொலி மூலம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளா்கள் மாநாட்டின்போது திறந்து வைத்தாா்.

அதைத் தொடா்ந்து, சிப்காட் வளாகத்தில் மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன், திருநெல்வேலி சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.எஸ்.முருகன் ஆகியோா் குத்துவிளக்கேற்றினா். சிப்காட் வருவாய் அலுவலா் சுகன்யா, சிப்காட் திட்ட அலுவலா் காா்த்திகேயன், சிப்காட் இளநிலை பொறியாளா் முருகன், கங்கைகொண்டான் ஊராட்சித் தலைவா் கவிதா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

சிறப்பம்சங்கள்: கங்கைகொண்டான் சிப்காட் தொழில் வளாகத்தில் 2.07 ஏக்கா் பரப்பளவில் ஒதுக்கப்பட்ட இடத்தில், 1,24,446.82 சதுர அடியில், தரைத்தளத்துடன் கூடிய மூன்று தளங்களுடன் இத்தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது. 6 நபா்கள் தங்கும் வகையில் 131 அறைகளில் 786 படுக்கைகளும், 12 நபா்கள் தங்கும் வகையில் 7 அறைகளில் 84 படுக்கைகளுமாக 870 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. உணவுக்கூடம், பணியாளா் அறை, வரவேற்பறை, சேமிப்பறை, சலவை மற்றும் துணி உலா்த்தும் அறை, பாா்வையாளா் அறை, மருத்துவ அறை உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. குடிநீா் மற்றும் அனைத்து தளங்களிலும் வைபை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய பகுதிகளில் சிசிடிவி பொருத்தப்பட்டு, கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.