புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

மருத்துவமனை அறை வாடகை 3 நட்சத்திர விடுதி கட்டணத்தைவிட கூடுதலாக இருக்கக் கூடாது! பரிந்துரை

பெரு நகரங்களில் உள்ள தனியார் மருத்துவமனை அறை வாடகை 3 நட்சத்திர விடுதி கட்டணத்தைவிட கூடுதலாக இருக்கக் கூடாது என்று நாடாளுமன்றக் குழு பரிந்துரை பற்றி..

Tirunelveli Medical College Hospital inaugurated a 11-bedded heat stock ward to treat patients with heat related health complications. EXPRESS PHOTO/

மருத்துவமனை - பிரதி படம் - Center-Center-Tirunelveli

Published On :

நகரங்களில் உள்ள தனியார் மருத்துவமனை அறையின் கட்டணம், 3-நட்சத்திர விடுதி அறைக்கான கட்டணத்தை விட அதிகமாக இருக்கக்கூடாது என்று மருத்துவ சுகாதார அமைப்புகளின் கட்டணம் மற்றும் அணுகல்கள் குறித்து நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது.

நாடு முழுவதும் சுகாதார சேவைகளை மக்கள் பயன்படுத்தும் வகையில் கட்டணங்களை நிர்ணயிப்பது, நோயாளிகள் தங்கள் சொந்தப் பணத்திலிருந்து மேற்கொள்ளும் மருத்துவச் செலவுகளைக் குறைப்பதற்கும் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பெருநகரில் உள்ள தனியார் மருத்துவமனை அறையின் கட்டணம், அப்பகுதியில் உள்ள மூன்று நட்சத்திர ஹோட்டல் அறையின் சராசரி கட்டணத்தை விட அதிகமாக இருக்கக்கூடாது என்று நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்திருக்கிறது.

பொது மற்றும் தனியார் துறைகளில் சுகாதார வசதிகளின் கட்டுபாடியாகும் கட்டணம் மற்றும் அணுகல்தன்மை என்ற தலைப்பிலான, சுகாதாரம் மற்றும் குடும்ப நலனுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் 176வது அறிக்கை, குறிப்பாக பெருநகரங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அறைக் கட்டணங்கள் அவசர நடைமுறையாக முறைப்படுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.

இந்த பரிந்துரை அறிக்கையானது, மாநிலங்களவையில் சமர்ப்பிக்கப்பட்டு, மக்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டது.

பல தனியார் மருத்துவமனைகளின் அறை வாடகை மிக அதிகமாக இருக்கும் நிலையில், சில மருத்துவக் காப்பீடுகளில் அந்த தொகை வழங்கப்படாமல் நோயாளிகளே அதனை செலுத்தும் நிலை ஏற்படுகிறது.

எனவே நாடாளுமன்ற குழு பரிந்துரையில், நாட்டில் உள்ள பெருநகரங்களில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் மூன்று நட்சத்திர ஹோட்டல் கட்டண அளவுகோலைக் கட்டாயமாக்க வேண்டும் என்று அக்குழு பரிந்துரைத்தது. சிகிச்சையில் ஈடுபடும் பயிற்சி மருத்துவர், செவிலியர், ஒருமுறை பயன்படுத்தும் மருத்துவப் பொருள்கள், உணவு மற்றும் சலவைச் செலவுகள் அடிப்படை அறைக் கட்டணத்துடன் சேர்க்கப்படலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டண விவரங்களுடன், எந்தவொரு சிக்கலான அல்லது நீண்டகால மருத்துவ சிகிச்சையைத் தொடங்குவதற்கு முன்பு, அனைத்து மருத்துவமனைகளும் நோயாளிகளுக்கு விரிவான, சட்டப்படியான முன்கூட்டிய செலவு மதிப்பீட்டையும் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த குழு பரிந்துரைத்திருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.