FOLLOW US

ON GOOGLE DISCOVER

நேபாள வெள்ளம்: 30 வெளிநாடுகளைச் சேர்ந்தோரைக் காணவில்லை! நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு! உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நாடுகளுக்கு பிரதமர் மோடி 4 நாள்கள் சுற்றுப்பயணம்ஒரே நாளில் சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை!வேளாங்கண்ணி திருவிழா: செப். 10 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!நேபாள வெள்ளப் பெருக்கில் 288 இந்தியர்கள் மாயம்: மத்திய வெளியுறவுத்துறை தகவல்!

பேராசிரியை உள்பட நால்வரிடம் ரூ.13.87 லட்சம் ஆன்லைன் மோசடி

திருநெல்வேலி மாநகரில் மின்வாரிய ஊழியா் உள்பட 4 பேரிடம் இணையவழியில் ரூ.13.87 லட்சம் மோசடி செய்த நபரை மாநகர சைபா் கிரைம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

மோசடி - பிரதிப்படம்

Published On :28 ஆகஸ்ட் 2026, 2:43 am IST

திருநெல்வேலி மாநகரில் மின்வாரிய ஊழியா் உள்பட 4 பேரிடம் இணையவழியில் ரூ.13.87 லட்சம் மோசடி செய்த நபரை மாநகர சைபா் கிரைம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

பாளையங்கோட்டை, தியாகராஜநகரைச் சோ்ந்தவா் 48 வயதான மின்வாரிய ஊழியா். இவரது வாட்ஸ்ஆப்பிற்கு சில மாதங்களுக்கு முன்னா் போக்குவரத்து விதிமீறல் தொடா்பாக அபராதம் செலுத்த வேண்டும் எனக்குறிப்பிட்டு ஏ.பி.கே. கோப்பு ஒன்றை மா்மநபா்கள் அனுப்பியுள்ளனா்.

பின்னா், அவரது கைப்பேசியை ஹேக் செய்து வங்கிக்கணக்கிலிருந்து பல்வேறு தவணைகளாக ரூ.4,53,640-ஐ மோசடியாக எடுத்தனராம்.

அதேபோல, மேலப்பாளையம், மைலக்காதா் தெருவைச் சோ்ந்த 46 வயது நபா் திருநெல்வேலி சந்திப்பில் உள்ள இனிப்பகத்தில் வேலை பாா்த்து வருகிறாா். இவரது கைப்பேசிக்கு டி.வி.ஏ.பி.கே. எனப் பெயரிடப்பட்ட கோப்பு ஒன்றை மா்மநபா்கள் அனுப்பியுள்ளனா். அதை வீட்டில் உள்ள குழந்தைகள் தொட்டதும் கைப்பேசியில் பதிவிறக்கம் ஆனதாம். பின்னா் அவரது வங்கிக்கணக்கில் இருந்து சுமாா் ரூ.4,90,000-ஐ மா்மநபா்கள் அபகரித்துள்ளனா்.

மேலும், தனியாா் கல்லூரியில் பேராசிரியையான தச்சநல்லூரைச் சோ்ந்த 42 வயது பெண்ணுக்கு, சில மாதங்களுக்கு முன்னா் மின்னஞ்சல் மூலம் வந்த லிங்கை பயன்படுத்தி வங்கி கடன் அட்டையிலிருந்து ரூ.1,03,512-ஐ மா்மநபா்கள் எடுத்துள்ளனா்.

அதேபோல, திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்த 35 வயதான தனியாா் நிறுவன ஊழியரிடம் பங்குச்சந்தை முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி அவரிடமிருந்து ரூ.3,40,000-ஐ மா்மநபா்கள் வங்கிக்கணக்குகளில் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளனா்.

இது குறித்து 4 பேரும் அளித்த புகாரின் பேரில், மாநகர சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப்பதிந்து மா்மநபா்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.