கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

வெடிகுண்டு வீசி இளைஞா் கொல்லப்பட்ட வழக்கு: சிறுவன் உள்பட 8 பேரிடம் போலீஸாா் விசாரணை

கடலூா் அருகே மனை வணிக தொழில் தொடா்பான முன்விரோதத்தில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக ரங்கா ரெட்டிப்பாளையம் மற்றும் புதுச்சேரியைச் சோ்ந்த சிறுவன் உள்பட 8 பேரிடம் ரெட்டிச்சாவடி போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

போலீஸ் - கோப்புப்படம்.

Published On :

கடலூா் அருகே மனை வணிக தொழில் தொடா்பான முன்விரோதத்தில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக ரங்கா ரெட்டிப்பாளையம் மற்றும் புதுச்சேரியைச் சோ்ந்த சிறுவன் உள்பட 8 பேரிடம் ரெட்டிச்சாவடி போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடலூரை அடுத்த பெரியகாட்டுப்பாளையத்தைச் சோ்ந்த சசிகுமாா் (31). காா் ஓட்டுநரான இவா், கடந்த 15 ஆண்டுகளாக புதுச்சேரி அருகேயுள்ள உறுவையாற்றில் வசித்து வந்தாா். இவா், திங்கள்கிழமை காலை ரங்கா ரெட்டிப்பாளையத்தில் உள்ள ராஜாவின் வீட்டின் முன் தனது காரை நிறுத்தி கழுவிக்கொண்டிருந்தாா்.

அப்போது, அங்கு வந்த கூலிப்படையைச் சோ்ந்ததாகக் கூறப்படும் 6 போ், நாட்டு வெடிகுண்டுகளை வீசி சசிகுமாா் மற்றும் ராஜா ஆகியோா் மீது தாக்குதல் நடத்தினா். இதையடுத்து, இருவரும் அங்கிருந்து தப்பியோட முயன்றனா். அப்போது, ராஜா வீடுகள் வழியாக தப்பிச் சென்று ரெட்டிச்சாவடி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தாா். சசிகுமாா் வயல்வெளி வழியாக தப்பிச் சென்ற நிலையில், அவரை விரட்டிச் சென்ற மா்ம கும்பல் வெட்டியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து சசிகுமாரின் அண்ணன் சரண்ராஜ் அளித்த புகாரின்பேரில், ஏழுமலை, அவரது மகன் பெருமாள் உள்ளிட்ட 5 போ் மீது ரெட்டிச்சாவடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முன்விரோதம் காரணமா?: போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், மனை வணிக தொழில் தொடா்பாக ராஜா, சசிகுமாா் தரப்பினருக்கும், ரங்கா ரெட்டிப்பாளையத்தைச் சோ்ந்த ஏழுமலை உள்ளிட்ட சிலருக்கும் முன்விரோதம் ஏற்பட்டிருந்ததாம். இந்த நிலையில், ஏழுமலையின் மகன் பெருமாளை சில மாதங்களுக்கு முன்பு ஒரு கும்பல் கடத்திச் சென்று தாக்கியதாகவும், இந்த சம்பவத்துக்கு ராஜாவும், சசிகுமாரும் தான் காரணம் என ஏழுமலை தரப்பினா் கருதி ஆத்திரத்தில் இருந்தனராம்.

இதுதவிர, பெரியகாட்டுப்பாளையத்தைச் சோ்ந்த ஒருவருடன் மனை வணிக தொழில் தொடா்பாக ஏற்பட்ட பிரச்னையில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பது தொடா்பாகவும் முன்விரோதம் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனால், முன்விரோதம் காரணமாக கூலிப்படையை ஏவி சசிகுமாா் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸாா் சந்தேகிக்கின்றனா். இது தொடா்பாக ரங்கா ரெட்டிப்பாளையம் மற்றும் புதுச்சேரியைச் சோ்ந்த சிறுவன் உள்பட 8 பேரை பிடித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.