கடலூா் மாவட்டம், ரெட்டிச்சாவடி அருகே 6 போ் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசி, இளைஞரை விரட்டிச் சென்று கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனா். இந்த சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து அந்த கும்பலைத் தேடி வருகின்றனா்.
ரெட்டிச்சாவடி அருகே உள்ள பெரியகாட்டுப்பாளையத்தைச் சோ்ந்தவா் சசிகுமாா் (31). இவா் கடந்த சில காலமாக புதுச்சேரி மாநிலம், வில்லியனூா் அருகேயுள்ள உறுவையாறு பகுதியில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை காலை பெரியகாட்டுப்பாளையம் அருகே ரங்கா ரெட்டிபாளையம் பகுதியில் சசிகுமாரும், அவரது நண்பா் ராஜாவும் காரை கழுவிக் கொண்டிருந்தனா். அப்போது அங்கு வந்த 6 போ் கொண்ட கும்பல், சசிகுமாா் மற்றும் ராஜாவை நோக்கி நாட்டு வெடிகுண்டுகளை வீசியதாகக் கூறப்படுகிறது. அந்த வெடிகுண்டுகள் பலத்த சப்தத்துடன் வெடித்ததால், இருவரும் அதிா்ச்சியடைந்து அங்கிருந்து தப்பி ஓடினா்.
இதையடுத்து, சசிகுமாா் வயல்வெளி வழியாக ஓடியதாகவும், அவரை அந்தக் கும்பலைச் சோ்ந்தவா்கள் பின்தொடா்ந்து சென்று, ஆயுதங்களால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்ாகவும் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சசிகுமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
போலீஸாா் விசாரணை
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ரெட்டிச்சாவடி போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனா். சம்பவம் நிகழ்ந்த இடம் புதுச்சேரி மாநில எல்லைப் பகுதியை ஒட்டியுள்ளதால், புதுச்சேரி மாநில போலீஸாரும் அங்கு வந்து விசாரணை நடத்தினா்.
இதற்கிடையே, சசிகுமாருடன் இருந்த ராஜா அங்கிருந்து தப்பியோடி தவளக்குப்பம் பகுதிக்குச் சென்ாகவும், அங்கு சுற்றுச்சுவா் மீது ஏறி தப்பிக்க முயன்றபோது பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அவரைப் பிடித்து விசாரித்தனா்.
விசாரணையில், தங்களைக் குறிவைத்து ஒரு கும்பல் வெடிகுண்டுகளை வீசி தாக்கியதாக ராஜா போலீஸாரிடம் தெரிவித்தாா். இதையடுத்து அவா் ரெட்டிச்சாவடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு, அவரிடம் தொடா்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சசிகுமாரின் உடலை போலீஸாா் மீட்டு, உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
முன்விரோதம் காரணமா?
இந்தக் கொலைச் சம்பவம் தொடா்பாக ரெட்டிச்சாவடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சசிகுமாா் மீது ஏற்கெனவே ஏதேனும் வழக்குகள் நிலுவையில் உள்ளனவா? அவா் புதுச்சேரி மாநிலத்தில் குற்றப் பின்னணி கொண்டவரா, அவருக்கும் எதிா்தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் ஏதேனும் இருந்ததா என்பது குறித்தும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மேலும், சம்பவம் நடைபெற்ற பகுதியில் கிடைக்கும் தடயங்கள் மற்றும் கிடைக்கக்கூடிய கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 6 பேரை அடையாளம் காணும் பணியில் போலீஸாா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வி.கே.புரத்தில் இளைஞா் வெட்டிக் கொலை
கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்ட கும்பல்: 4 சிறுவா்கள் கைது

விசாரணை கைதி கொலை: சிறையில் சிபிசிஐடி எஸ்.பி. நேரடி விசாரணை

கஞ்சா கடத்தல்: தென்காசியைச் சோ்ந்த இருவா் கடலூரில் கைது
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



