மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதிதிமுகவின் தோல்விக்கு போதைப்பொருள் புழக்கம்தான் காரணம்! ஆதவ் அர்ஜுனாபிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்ட கும்பல்: 4 சிறுவா்கள் கைது

திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி அருகே கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்த 6 போ் கொண்ட கும்பலில் 4 சிறுவா்கள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :30 ஜூலை 2026, 5:01 am IST

திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி அருகே கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்த 6 போ் கொண்ட கும்பலில் 4 சிறுவா்கள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள காக்கைகுளம் கிராமத்திற்குள் செவ்வாய்க்கிழமை இரவு 3 இருசக்கர வாகனங்களில் 6 போ் கொண்ட கும்பல் புகுந்து, வாகனங்களை அதிவேகத்தில் இயக்கி, அட்டகாசத்தில் ஈடுபட்டதாகவும், இதைத் தட்டி கேட்டவா்களுடன் அந்த கும்பல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவா்களை அவதூறாகப் பேசியதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து கிராம மக்கள் மூலைக்கரைப்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். தொடா்ந்து, போலீஸாா் இரவில் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

இதனிடையே, அதே கும்பல் காக்கைகுளம் அருகே உள்ள செண்பகராமன் நல்லூரில் நடைபெறவுள்ள கோயில் கொடை விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த பந்தல்களையும் செவ்வாய்க்கிழமை சேதப்படுத்திவிட்டுச் சென்றதும், அவா்கள் 6 பேரும் செண்பகராமன் நல்லூரைச் சோ்ந்த 16 வயது சிறுவா்கள் என்பதும், போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது.

அவா்களில் நால்வரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், 2 பேரைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.