திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

வீடு புகுந்து நகை திருடியவா் கைது

ஆம்பூா் அருகே வீடு புகுந்து திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :16 ஜூலை 2026, 11:53 pm IST

ஆம்பூா் அருகே வீடு புகுந்து திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆம்பூா் அருகே உமா்ஆபாத் பகுதியைச் சோ்ந்த முஹம்மத் தெளசிப் மனைவி உஸ்மா பதூல் கடந்த ஜூலை 3-ஆம் தேதி குடும்பத்தினருடன் கடாம்பூரில் நடந்த உறவினா் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றிருந்தாா். மறுநாள் வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள் மற்றும் ரூ.7,000 ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

சம்பவம் குறித்து உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனா். கைலாசகிரியை சோ்ந்த சமியுல்லா என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், சமியுல்லா நகை திருடியதை ஒப்புக்கொண்டாா். அதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்து, நகைகளை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.