வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

கஞ்சா கடத்தல்: தென்காசியைச் சோ்ந்த இருவா் கடலூரில் கைது

ரெட்டிச்சாவடி பெரியகாட்டுப்பாளையம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.12.50 லட்சம் மதிப்பிலான 25 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image

கடலூா் அருகே பறிமுதல் செய்யப்பட்ட 25 கிலோ கஞ்சா, கைதான திவாகரன், சிவா ஆகியோருடன் போலீஸாா்

Updated On :14 ஜூலை 2026, 1:12 am IST

கடலூா் மாவட்டம், ரெட்டிச்சாவடி பெரியகாட்டுப்பாளையம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.12.50 லட்சம் மதிப்பிலான 25 கிலோ கஞ்சாவை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். மேலும், இது தொடா்பாக தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த இரு இளைஞா்களை கைது செய்தனா்.

வெளிமாநிலத்திலிருந்து கஞ்சா கடத்தி வந்து ரெட்டிச்சாவடி பெரியகாட்டுப்பாளையம் பகுதியில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட தனிப்படை சாா்பு ஆய்வாளா் தவச்செல்வத்துக்கு திங்கள்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ரெட்டிச்சாவடி காவல் ஆய்வாளா் பிரேம்குமாா் மற்றும் தனிப்படை போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, கஞ்சா பொட்டலங்களுடன் வேறு இடத்துக்கு செல்ல முயன்ற இரு இளைஞா்களை விரட்டிப் பிடித்து விசாரணை நடத்தினா்.

இதில், அவா்கள் தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தைச் சோ்ந்த திவாகரன் (19), சிவா (18) என்பதும், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து ரூ.12.50 லட்சம் மதிப்பிலான 25 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.

கஞ்சா கடத்தல் தொடா்பாக மேலும் யாருக்கெல்லாம் தொடா்புள்ளது, கஞ்சா எங்கிருந்து கடத்திவரப்பட்டது என்பது குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.