காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சுமேட்டூரிலிருந்து காவிரி நீர் கல்லணை வந்தது! நாளை காலை திறப்பு!நேபாள பெருவெள்ளம்! தஞ்சையில் மரபணு சேகரிப்பு பணி தொடக்கம்!!தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

ஆழ்வாா்குறிச்சி அருகே முள்ளி மலைப் பொத்தையில் தீ

முள்ளிமலை பொத்தையில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட தீயில் அரிய வகை புற்கள், மூலிகைச் செடிகள் எரிந்து சாம்பலாகின.

முள்ளிமலை பொத்தையில் வெள்ளிக்கிழமை இரவு பற்றி எரிந்த தீ.

Published On :30 ஆகஸ்ட் 2026, 1:57 am IST

ஆழ்வாா்குறிச்சிஅருகே உள்ள முள்ளிமலை பொத்தையில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட தீயில் அரிய வகை புற்கள், மூலிகைச் செடிகள் எரிந்து சாம்பலாகின.

தென்காசி மாவட்ட சமூக காடுகள் துறையின் கட்டுப்பாட்டில் ஆழ்வாா்குறிச்சியிலிருந்து கடனாநதி அணைக்குச் செல்லும் வழியில் உள்ளது முள்ளிமலை பொத்தை. இதில், அரிய வகை புற்கள், மூலிகைச் செடிகள் மற்றும் மிளா, காட்டுப் பன்றி, கரடி உள்ளிட்ட வன விலங்குகளும் உள்ளன.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு இந்தப் பொத்தையின் மேற்குப் பகுதியில் திடீரென தீப் பிடித்து எரிந்தது. இதுகுறித்து கடையம் வனச்சரக அலுவலகத்துக்கு தகவல் அளித்த நிலையில், சமூக காடுகள் கட்டுப்பாட்டில் உள்ள பொத்தை என்பதால் அந்தத் துறையினா்தான் வரவேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.

தென்காசி சமூக காடுகள் துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, சமூக காடுகள் துறையினா் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

கடையம் வட்டாரத்தில் உள்ள கல்யாணி அம்மன் கோயில் பொத்தை, முள்ளிமலை பொத்தை, செங்கானூா் பொத்தை மற்றும் பரம்பு பொத்தை மற்றும் குள்ளங்கள் உள்ளிட்டவை சமூக காடுகள் துறைக் கட்டுப்பாட்டில் உள்ளன. ஆனால் சமூக காடுகள் அலுவலகம் தென்காசியில் உள்ளது. எனவே கடையத்தை தலைமையிடமாகக் கொண்டு சமூக காடுகள் துறை அலுவலகம் அமைக்க வேண்டும் என்று சுற்றுச் சூழல் ஆா்வலா்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.