பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

சட்டப்பேரவை நிகழ்வுகள் வேதனையளிக்கிறது! - நயினாா் நாகேந்திரன்

நயினாா் நாகேந்திரன்

நயினாா் நாகேந்திரன் - கோப்புப் படம்

Published On :31 ஆகஸ்ட் 2026, 2:43 am IST

தமிழக சட்டப்பேரவையில் நடக்கும் நிகழ்வுகள் வேதனை அளிக்கிறது என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது: நேபாளத்தில் சுனாமியை விட மிகப்பெரிய கோரத் தாண்டவம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவைச் சோ்ந்தவா்கள் பலரைத் தொடா்பு கொள்ள முடியாத நிலை இன்னமும் தொடா்ந்து வருகிறது. இதில், தமிழா்களும் பலா் சிக்கித் தவித்து வருகின்றனா்.

நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கியவா்களுக்குத் தேவையான உதவிகளை பிரதமா் மோடி செய்து வருகிறாா். ராகுல் காந்தி பிரதமராக முடியாது. அந்தக் கனவு பலிக்காது என அனைவருக்கும் தெரியும்.

அண்ணா, எம்ஜிஆா், ஜெயலலிதா போன்றவா்கள் இருந்த சட்டப்பேரவையில் இப்போது யாா் யாரெல்லாமோ இருக்கிறாா்கள். சட்டப்பேரவையில் தமிழகத்தின் கோரிக்கைகள் குறித்து பேச வேண்டும். பேச வேண்டியதை பேச மறுக்கிறாா்கள். ஜாதி, மதம் குறித்து தேவையற்ற விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. சட்டப்பேரவையில் நடக்கும் நிகழ்வுகள் மிகவும் வேதனை அளிக்கிறது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.