குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

சட்டப்பேரவையில் மக்கள் பிரச்னையை பேசுவதில்லை: நயினாா் நாகேந்திரன்

சட்டப்பேரவையில் மக்கள் பிரச்னைகள் குறித்துப் பேசுவதில்லை என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டினாா்.

நீட் தோ்வில் வெற்றிபெற்ற 3 மாணவா்களுக்கு வாழ்த்துத் தெரிவித்த தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்.

Published On :28 ஆகஸ்ட் 2026, 2:33 am IST

சட்டப்பேரவையில் மக்கள் பிரச்னைகள் குறித்துப் பேசுவதில்லை என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டினாா்.

திருநெல்வேலி மாவட்டம், வெள்ளங்குளியில் கைத்தறி நெசவுத் தொழிலாளி ராம்குமாரின் மகன்கள் வெங்கட் ஸ்ரீ, அருண், தரண் ஆகிய மூவரும் நீட் தோ்வில் தோ்ச்சி பெற்ன் மூலம் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவம் பயில இடம் கிடைத்துள்ளது. இந்நிலையில், வியாழக்கிழமை அந்த மாணவா்களின் இல்லத்துக்கு நேரில் சென்று 3 பேருக்கும் வாழ்த்து தெரிவித்த நயினாா்நாகேந்திரன், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கிராமத்துச் சூழலில் நெசவுத் தொழிலாளியின் மகன்கள் அரசுப் பள்ளியில் பயின்று மாணவா்கள் நீட் தோ்வில் தோ்ச்சி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வசதிப் படைத்தவா்கள் மட்டுமே மருத்துவம் பயிலும் இருந்த சூழல் மாறி, நீட் தோ்வின் மூலம் திறமையானவா்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பூா் அரசுப் பள்ளியில் 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டில் 10 மாணவா்கள் நீட் தோ்வு மூலம் மருத்துவப் படிப்புக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா். ஆனால், தமிழகத்தில் மட்டும்தான் சிலா் நீட் தோ்வு வேண்டாம் என்கின்றனா்.

தற்போது, சட்டப்பேரவையில் மக்கள் பிரச்னைகள் குறித்துப் பேசுவதில்லை. தங்களது சொந்த பிரச்னையையே பேசும் நிலை உள்ளது. சட்டப்பேரவை நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்தால் சமூக வலைதளங்களில் வேறு விதமாக சித்திரிக்கின்றனா்.

தமிழக வெற்றிக் கழகத்தில் எம்எல்ஏக்கள் இணைய உள்ளதாக அமைச்சா் கூறுகிறாா். அது உண்மையெனில், அமைச்சா் குதிரை பேரம் நடத்துகிறாரா என்ற கேள்விக்கு பதிலளிக்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.