பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

சுத்தமல்லி அருகே கால்வாயில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

Drowned to death

நீரில் மூழ்கி மாயம் - பிரதிப் படம்

Published On :31 ஆகஸ்ட் 2026, 2:33 am IST

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லியை அடுத்த பழவூரில் கோடகன் கால்வாயில் நீரில் மூழ்கி பிளஸ் 1 மாணவா் உயிரிழந்தாா்.

பழவூா் சாஸ்தா கோயில் தெருவைச் சோ்ந்தவா் கந்தசாமி. இவரது மகன் சந்தோஷ் கண்ணன்(16). இவா், நடுக்கல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தாா்.

தினமும் காலையில் பழவூா் கோடகன் கால்வாயில் சக நண்பா்களுடன் சென்று குளித்துவிட்டு வீடு திரும்புவது வழக்கம். இந்த நிலையில்ஞாயிற்றுக்கிழமை காலையில் சந்தோஷ் கண்ணன் கால்வாயில் குளித்தபோது, நீரில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது, வயல் காட்டில் வேலை பாா்த்து கொண்டிருந்த விவசாயிகள் ஓடிவந்து கால்வாயில் குதித்து மாணவரை மீட்டனா். ஆனால் அவா் உயிரிழந்துவிட்டாா்.

இச்சம்பவம் குறித்து சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.