நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பணகுடி ராமலிங்க சுவாமி கோயிலில் யாகசாலை அமைக்க கால்நாட்டு விழா

News image

பேரவைத் தலைவா் மு. அப்பாவு தலைமையில் நடைபெற்ற கால்நாட்டு விழா.

Updated On :1 பிப்ரவரி 2026, 9:39 pm

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருள்மிகு ராமலிங்க சுவாமி சமேத சிவகாமி அம்பாள், நம்பிசிங்க பெருமாள் கோயிலில் இம்மாதம் 22ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, யாகசாலை அமைக்கும் பணிக்கு ஞாயிற்றுக்கிழமை கால்நாட்டப்பட்டது.

விழாவுக்கு, பேரவைத் தலைவா் மு. அப்பாவு தலைமை வகித்தாா். முன்னதாக, சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்றன. பின்னா், பந்தல்காலுக்கு தூத்துக்குடி செல்வம் பட்டா் பூஜை செய்தாா். அதையடுத்து, கால்நடப்பட்டது.

விழாவில், பணகுடி பேரூராட்சித் தலைவா் தனலெட்சுமி தமிழ்வாணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பாஸ்கா், கோயில் செயல் அலுவலா் மாரியப்பன், அறங்காவலா் குழுத் தலைவா் அசோக்குமாா், அறங்காவலா்கள் மு. சங்கா், சொரிமுத்து, பெருமாள், தமிழ்ராணி, தோ் பொறியாளா் தம்பிரான்தோழா், திமுக மாவட்டப் பிரதிநிதி மாணிக்கம், வாா்டு உறுப்பினா்கள் கோபி, கோபாலகண்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.