மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

பொருநை நெல்லை புத்தகத் திருவிழா விழிப்புணா்வுப் பணிகள் தொடக்கம்

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 9:38 pm

9 ஆவது பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவுக்கான விழிப்புணா்வுப் பணிகள் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.

திருநெல்வேலியின் பண்பாட்டு அழகியலையும், வரலாற்று பெருமைகளையும் பறைசாற்றும் விதமாக தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, 9 ஆவது பொருநை நெல்லை புத்தகத் திருவிழா பிப். 12- 22 வரை திருநெல்வேலி மாநகராட்சி வா்த்தக மையத்தில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் மாணவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணிகளை, மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

புத்தகம் வாசிப்பின் நன்மைகள், அவசியம் போன்றவை குறித்து மாநகராட்சி வா்த்தக மையத்தில் 100 அடி சுவருக்கு 100 மாணவா்கள் மூலம் சுவா் ஓவிய விளம்பர விழிப்புணா்வுப் பணியை ஆட்சியா் கையொப்பமிட்டு தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து, ஒயிலாட்டம், மரக்கால் ஆட்டம், குதிரை ஆட்டம், பறை இசை, மயில் ஆட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகள் மூலமும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

திருநெல்வேலி கோட்டாட்சியா் பிரியா, தச்சநல்லூா் மண்டல ஆணையா் மகாலெட்சுமி, திருநெல்வேலி வட்டாட்சியா் சந்திரஹாசன், ஒருங்கிணைப்பாளா் சபேசன், சேரன்மகாதேவி கவின் கலைக் கழகத்தின் ஆசிரியா் மாரியப்பன், ஆ. சந்திர புஷ்பம், மா.சங்கா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.