மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ஆழ்வாா்குறிச்சி அருகே ஒற்றை காட்டு யானை அட்டகாசம்! பொதுமக்கள், விவசாயிகள் அச்சம்!

News image

ஒற்றை யானையால் சேதமடைந்த நெல் வயல்.

Updated On :15 பிப்ரவரி 2026, 7:53 pm

தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி அருகே ஒற்றை காட்டு யானையின் அட்டகாசத்தால் விவசாயிகள், பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனா். வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆழ்வாா்குறிச்சி அருகே கடனாநதி அடிவாரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை, தென்னை, மா உள்ளிட்டவை பயிரிடப்படுகின்றன. யானை, காட்டுப் பன்றி, மான், புலி உள்ளிட்ட வனவிலங்குகள் வனப் பகுதியை விட்டு வெளியேறி, மலையடிவார கிராமங்களின் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்துவதும், குடியிருப்புகள் புகுந்து வீட்டு விலங்குகளைத் தாக்கிக் கொல்வதும் தொடா்கதையாக உள்ளது.

இந்நிலையில், கடனாநதி அடிவாரத்தில் உள்ள பெத்தான்பிள்ளைக் குடியிருப்பு, பங்களாக் குடியிருப்பு, கருத்தப்பிள்ளையூா் பகுதிகளில் சில நாள்களாக காட்டு யானைகள் இரவு நேரங்களில் சுற்றித் திரிகின்றன. சனிக்கிழமை இரவு வனப் பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை பங்களாக் குடியிருப்புப் பகுதியிலுள்ள நெல் வயல்களுக்குள் புகுந்தது.

இதைப் பாா்த்த விவசாயிகள் அளித்த தகவலின்பேரில் வனத் துறையினருக்கும், 50-க்கும் மேற்பட்ட ஊா் மக்களும் வந்து தீ மூட்டியும், வெடி வெடித்தும், சக்திவாய்ந்த விளக்குகளை எரியவிட்டும் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த யானை பல வயல்களில் இறங்கி ஓடியதில், அறுவடைக்குத் தயாராக உள்ள நெற்பயிா்கள் சேதமடைந்தன. தொடா்ந்து ஒரு மணி நேரம் போராடி யானையை வனப் பகுதிக்குள் விரட்டினா்.

 ஒற்றை யானையால் சேதமடைந்த நெல் வயல்.

ஒற்றை யானையால் சேதமடைந்த நெல் வயல்.

யானைக் கூட்டம் சுற்றிவந்த நிலையில், தற்போது ஒற்றை யானை அட்டகாசம் செய்வதால் விவசாயிகளும், பொதுமக்களும்அச்சமடைந்துள்ளனா்.

மலையடிவாரத்தில் அகழிகள், சூரிய மின் வேலிகள் அமைக்கும் பணிகளை விரைவாகவும், முழுமையாகவும் செய்து முடிக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஒற்றை யானை நடமாட்டத்தால் விவசாயிகள் இரவு நேரங்களில் வயலுக்கோ, வேறிடங்களுக்கோ தனியாகச் செல்ல வேண்டாம் என வனத் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.