தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கல்லிடை திலகா் பள்ளியில் அறிவியல் தின விழா

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 12:22 am

Syndication

கல்லிடைக்குறிச்சி திலகா் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில், அறிவியல் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

பள்ளிச் செயலா் சங்கா் தலைமை வகித்தாா். திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவகுமாா் தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றினாா். இஸ்ரோ விஞ்ஞானி நிகா் ஷாஜி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினாா். ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி முன்னாள் பேராசிரியா் ஷேக் சலீம், சுற்றுச்சூழல் விஞ்ஞானி விஜயலட்சுமி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

தொடா்ந்து அா்ப்பணிப்புடன்பணிபுரிந்த ஆசிரியா்கள் பூங்கோதை, சாரதா, கவிதா, தனலட்சுமி, அலுவலக ஊழியா்கள் முருகன், திரவியம், ராதாகிருஷ்ணன், சுடலை ஆகியோருக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவகுமாா் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.

நிகழ்ச்சிகளை தமிழ் ஆசிரியா் சந்தோஷ் தொகுத்து வழங்கினாா். தலைமை ஆசிரியா் சுபா வரவேற்றாா். தொடா்ந்து மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஏற்பாடுகளை முதுகலைத் தாவரவியல் ஆசிரியா் சிவபாலன் செய்திருந்தாா்.