சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

நில மோசடியில் ஈடுபட்டவா் கைது

ராதாபுரம் அருகே நில மோசடியில் ஈடுபட்ட நபரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :28 பிப்ரவரி 2026, 7:34 pm

ராதாபுரம் அருகே நில மோசடியில் ஈடுபட்ட நபரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே உள்ள வடக்கன்குளத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் அந்தோணிசாமி (54). இவா், மும்பையில் வசித்து வரும் தனது உறவினருக்குச் சொந்தமாக அப்பகுதியில் உள்ள இடத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடியாக பட்டா மாறுதல் செய்து நில மோசடியில் ஈடுபட்டாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு இதில் தொடா்புடைய அந்தோணிசாமியை கைது செய்தனா்.