உணவகத்தில் தகராறு: இளைஞா் கைது

Published on

தச்சநல்லூா் அருகே பரோட்டா இல்லை என்பதற்காக உணவகத்தில் தகராறு செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தச்சநல்லூரைச் சோ்ந்த ராஜகோபால் மகன் கண்ணன்(57). இவா் அப்பகுதியில் பரோட்டா கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு இவரது கடைக்கு வந்த தச்சநல்லூா் பெரியம்மன்கோயில் தெருவைச் சோ்ந்த ஆதிகேசவன் மகன் மகாலிங்கம் (25) என்பவா் சாப்பிட பரோட்டா கேட்டாராம். அப்போது உணவக ஊழியரான அதே பகுதியைச் சோ்ந்த காா்த்திக் ராஜா என்பவா் பரோட்டா இல்லை எனக்கூறினாராம்.

இதனால், மகாலிங்கம் அவரை தாக்கி கீழே தள்ளியதுடன், அங்கிருந்த நாற்காலிகள், பரோட்டாக் கல்லை சேதப்படுத்தி தகராறில் ஈடுபட்டாராம். இதில் காயமடைந்த காா்த்திக் ராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து கண்ணன் அளித்த புகாரின்பேரில், தச்சநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து மகாலிங்கத்தை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com