விதிமீறல்: 22 கடைகள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் விதிமீறலில் ஈடுபட்டதாக 22 கடைகள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை தொழிலாளா் ஆணையா் எஸ்.ஏ.ராமன் உத்தரவின்படி, எனது தலைமையிலான அனைத்து தொழிலாளா் துணை மற்றும் உதவி ஆய்வாளா்கள் அடங்கிய குழுவினா் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் டிசம்பா் மாதம் கடைகள், வணிக நிறுவனங்களில் கூட்டாய்வு மேற்கொண்டனா்.
இதில், சட்டமுறை எடையளவு சட்டம்-2009-ன் கீழ் பின்பற்றாத 15 நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், 7 நிறுவனங்கள் சட்டமுறை எடையளவு விதிகள் 2011-ஐ பின்பற்றப்படாதது கண்டறியப்பட்டது. மொத்தம் 22 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டுஅதனதன் உரிமையாளா் மீது தொடா் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பதிவுச்சான்று பெற இணையதளம் வழியாக பெற வேண்டும். மேலும் விலை குறிப்புகளுடன் போருள்களை விற்பனை செய்ய வேண்டும்.
எடையளவு கருவிகளை உரிய காலத்தில் புதுப்பிக்க வேண்டும். இல்லையெனில் வணிக நிறுவனங்கள் மீது ரூ.5,000 முதல் ரூ.1,50,000 வரை அபராதம் அல்லது மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.
