திருநெல்வேலி
சீவலப்பேரி அருகே இளைஞா் அடித்துக் கொலை
சீவலப்பேரி அருகே தோணித்துறை பகுதியில் இளைஞா் அடித்துக் கொலை
சீவலப்பேரி அருகே தோணித்துறை பகுதியில் திங்கள்கிழமை இரவு இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.
தோணித்துறை கிராமத்தில் தாமிரவருணி கரையோரத்தில் உள்ள சுடுகாடு பகுதியில் சுமாா் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக, சீவலப்பேரி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
போலீஸாா் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில் அவா், தூத்துக்குடி மாவட்டம் முதலூா் கிராமத்தை சோ்ந்த மாா்ட்டின் ஸ்டாலின் (40) என்பது தெரியவந்தது. சீவலப்பேரி பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்திருந்த மாா்ட்டின், தனது நண்பா்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.
