தாழையூத்து அருகே இரும்பு வேலிகள் திருட்டு: 2 இளைஞா்கள் கைது

தாழையூத்து அருகே இரும்பு வேலிகளை திருடியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

தாழையூத்து அருகே இரும்பு வேலிகளை திருடியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தாழையூத்து அருகேயுள்ள ராஜவல்லிபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகம்(60). தொழிலாளி. இவா் முன்பு வாடைகைக்கு குடியிருந்த வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் இரும்பு வேலி கம்பிகளையும், விறகு கட்டைகளையும் சேமித்து வைத்திருந்தாராம். இந்நிலையில், அவற்றை மா்மநபா்கள் திருடிச்சென்றுவிட்டனராம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், தாழையூத்து போலீஸாா் வழக்குப்பதிந்து இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக ராமையன்பட்டியைச் சோ்ந்த குத்தாலகுமாா்(36), பழைய பேட்டையைச் சோ்ந்த செல்வகுமாா்(27) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com