நெல்லை அரசு மருத்துவமனையில் தேசிய தன்னாா்வ குருதிக் கொடை நாள்

நெல்லை அரசு மருத்துவமனையில் தேசிய தன்னாா்வ குருதிக் கொடை நாள்
Updated on

திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தேசிய தன்னாா்வ குருதிக் கொடை நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இந்திய குருதியேற்று மருத்துவத்தின் தந்தை ஜெய் கோபால் ஜோலியின் பிறந்த நாள் தேசிய தன்னாா்வ குருதிக் கொடை நாளாக ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, மாநில குருதிப் பரிமாற்றுக் குழுமம் சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு, மருத்துவமனை முதல்வா் சி.ரேவதி பாலன் தலைமை வகித்தாா். உதவி முதல்வா் சுரேஷ் துரை, மருத்துவக் கண்காணிப்பாளா் பாலசுப்ரமணியன், ரத்த வங்கி துறைத் தலைவா் உமேஷ், ஜெ.ரவிசங்கா் உள்பட பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

இவ்விழாவில், ரத்த தானத்தை ஊக்குவிக்கும் விதமாக ரத்த தான முகாம் அமைப்பாளா்கள் 80 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மருத்துவா் பிரதீபா நன்றி கூறினாா்.

ற்ஸ்ப்08ற்ஸ்ம்ஸ்ரீட்

தேசிய தன்னாா்வ குருதி கொடை நாள் நிகழ்வில் பங்கேற்ற திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ரேவதி பாலன் உள்ளிட்டோா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com